நாம் வாழ்ந்த வீடு எப்போதுமே மறக்க முடியாத நினைவுகளோடு ஒன்றாகவே நம் நினவுகளின் சில்லுகளில் சிக்கி கொள்கிறது.
ஜப்பானில், நோதா மாவட்டத்தில் உள்ள உங்கா (Unga) கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்த வீட்டை இன்று காலையில் காலி செய்து விட்டு பல்கலைக் கழக விருந்தினர் மாளிகைக்கு தற்காலிக வாசமாக வந்தாயிற்று.
கடந்த இரண்டு வருடங்களில் உங்கா கிராமம் முழுவதையும் சுற்றி அலைந்தேன். எங்கள் பகுதி முழுவதும் பெரும்பாலும் வயதான பெரியவர்கள் மட்டுமே இருப்பதால், நான் தெருவில் எதிர்படும் எல்லோருமே அக மகிழ்ச்சியோடு முகமன் வைப்பார்கள்.
அள்ளக் குறையாத பெரும் அன்பு நிறைந்த வீதியில்தான் இருந்தேன். அதுவும் அவந்தியை எங்கள் தெருவில் இருப்பவர்கள் பார்த்து விட்டால் அப்படி கொஞ்சுவார்கள்.
எங்கள் கிராமத்து உங்காவினை சுற்றி ஓடும் எதோ நதியின் கிளை சிற்றாறு, வயல்வெளி, உள்ளூர் திருவிழா, அழகிய காய்கறி தோட்டங்கள் என எல்லாமே என் நினவுகளில் பசுமையாய் இருக்கும்.
காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கும்..இந்த பயணத்தில் நிறைய பிரியமானவர்களை பிரிய நேரும், ஆனாலும் அவற்றை பற்றிய நினைவுகளில் மீண்டும் மீண்டும் மூழ்குவதும் புதிதாய் வசிக்க போகும் இடத்தில் அதனை ஒப்பிட்டு அங்கலாய்ப்பதுமாய் அடுத்த தருணங்கள் நகரும்.
உங்கா என்னளவில் என்னை முற்றிலும் கண்டுபிடிக்க உதவிய கிராமம்..
I am missing Unga village..